சிறப்பு கிராம சபை கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூர் ஒன்றியத்திற்குட்பட்ட மதியனூர் ஊராட்சியில் இ-சேவை மையம் கட்டிடம் அருகில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி அலுவலர் நாராயணசாமி, மண்டல மேலாளர் ஏழுமலை பங்கேற்றனர். ஊராட்சி மன்றத் தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சரண்யாஅம்மாசி, ஊராட்சி செயல் அலுவலர் கே.சண்முகம், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
