tamilnadu

img

ரயில்வே காலி பணியிடங்களை நிரப்புக டிஆர்இயூ சென்னை கோட்ட மாநாடு வலியுறுத்தல்

ரயில்வே காலி பணியிடங்களை நிரப்புக  டிஆர்இயூ சென்னை கோட்ட மாநாடு வலியுறுத்தல்

சென்னை, செப். 29- தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயூ) சென்னை கோட்ட 26ஆவது மாநாடு ஆவடியில்  நடை பெற்றது. எஸ்.சிவாஜி தலைமை தாங்கி னார். எம்.பிரபு வரவேற்றார். தட்சிண ரயில்வே பென்சனர்ஸ் யூனியன் தலைவர் ஆர்.இளங்கோவன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் சீனி வாசன் வேலை அறிக்கையையும், பொரு ளாளர் ஜோதி வரவு, செலவு அறிக்கை யையும் சமர்ப்பித்தனர். வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், இணை பொதுச் செயலாளர் ஏ.வெங்கட்ராமன், உதவி பொதுச்செய லாளர் எஸ்.அருண்குமார் செழியன், பேபி ஷகிலா, துணைத் தலைவர் ஜி.சிவக்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பொதுச்செயலாளர் வி.அரிலால் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். தீர்மானங்கள் ரயில்வே துறையில் உள்ள காலிப்பணி யிடங்களை உடனே நிரப்ப வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவதை கைவிட வேண்டும், டிஆர்இயூ சங்கத்திற்கு அலுவலகம் உள்ளிட்ட தொழிற்சங்க அங்கீகார வசதி கள் அனைத்தையும் உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு தலைவராக ஜி.ஜோதி, செயலாளராக கே.சீனிவாசன், பொருளாளராக எஸ்.சிவாஜி உள்ளிட்ட 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.