tamilnadu

img

கரூரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

கரூரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வாலிபர் சங்கம் சார்பில் சிதம்பரம் நகர தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ராகுல் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு மாணவர் சங்க கல்லூரி கிளைச் வி.லெனின் பிரதாப் தலைமை தாங்கினார். இதில் மதன்ராஜ், கோகுல்ராஜ், சக்தி, ரஞ்சித், பொன்மனச்செல்வன், சபரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இந்திய மாணவர் சங்கம் சார்பில் விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி கிளையின் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி மற்றும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் உ. தீபன், கிஷோர், சந்துரு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்க கூட்டமைப்பின் சார்பில் தலைவர் பாலு பச்சையப்பன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

திண்டிவனம் நகரத்தில் வாலிபர் சங்கம் சார்பில் முன்னாள் வட்டச் செயலாளர் டி.இராமதாஸ், மாவட்டப் பொருளாளர் ரவிசந்திரன், வட்டச் செயலாளர் பார்த்திபன், தலைவர் சத்தீஷ்குமார், திருமுருகன், லெனின் பிரதாப் உள்ளிட்ட ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.