tamilnadu

img

தோழர் தே.லட்சுமணனுக்கு அஞ்சலி...

மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் தே.லட்சுமணன் உடல் செங்கல்பட்டு நகராட்சி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அதன்பின் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், மாநிலக்குழு உறுப்பினர்கள்  க.பீம்ராவ், எஸ்.கண்ணன், ஆர்.வேல்முருகன், வா.பிரமிளா உள்பட பலர் உரையாற்றினார்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தே.லட்சுமணன் மறைவையொட்டி தென்சென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஜெயசங்கரன், எம்.ரெங்கசாமி உள்ளிட்டோர்  பேசினர்.


பொன்னேரியில் நடந்த இரங்கல் கூட்டதில் கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால், செயற்குழு உறுப்பினர் கே.விஜயன், மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


வடசென்னை மாவட்டக் குழு அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், எம்.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


காஞ்சிபுரம் பெருநகரக்குழு சார்பில் நகர செயலாளர் சி.சங்கர் தலைமையில் நடந்த அஞ்சலி  செலுத்தும் நிகழ்வில் செயற்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எ. வாசுதேவன், கே.நேரு, இ.லாரன்ஸ், ஆர்.சௌந்தரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள்  கமலநாதன், பி.வி.சீனுவாசன், மூர்த்தி, பி.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


கடலூரில் செயற்குழு உறுப்பினர் எம்.மருதவாணன் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் டி.புருசோத்தமன், ஆர்.மனோகரன், என்.காசிநாதன், சுப்பராயன், கருப்பையன், தட்சிணாமூர்த்தி, தமிழ்மணி, கருணாகரன், பால்கி, ஆட்டோ சந்திரசேகரன், ஸ்டாலின், தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


கிருஷ்ணகிரி மாவட்ட குழு சார்பில் ஓசூரில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.ஜெயராமன், வட்டச் செயலாளர் பி.ஜி.மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில்  மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் எம்.பிரகலநாதன், எஸ்.ராமதாஸ், நகரச் செயலாளர் எம்.ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


வேலூரில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, அனைத்துதுறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு மாவட்டத் தலைவர் எம் பி.ராமச்சந்திரன், ஏ.ஐ.பி.டி.பி.ஏ. மாநிலச் செயலாளர் ஞானசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் எம்.ஆறுமுகம், பி.சுப்பிரமணியன், எம்.செந்தில், நகரச் செயலாளர் கே.தங்கராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.