31 நாட்களாக தொடர்ந்து போராடிவரும் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தை அழைத்துப் பேசி சுமூக தீர்வு காண முன் வராத தமிழக அரசையும் போக்குவரத்து நிர்வாகத்தையும் கண்டித்து சிஐடியு வடசென்னை மாவட்டக்குழு சார்பில் அம்பத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சு.பால்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் வடசென்னை மாவட்ட தலைவர் எஸ்.கே.மகேந்திரன், செயலாளர் வி.குப்புசாமி ஆகியோர் பேசினர். இதில் மாவட்ட பொருளாளர் மா.பூபாலன், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.மணிமேகலை, மாவட்ட நிர்வாகிகள் , கே.ரவிச்சந்திரன், பி.கோவிந்தசாமி, சிட்டிபாபு, குணசேகரன், பி.லூர்துசாமி, கே.ஆர்.முத்துசாமி, மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், பகுதி நிர்வாகிகள் எல்.பி.சரவணத்தமிழன், கே.சீனிவாசன், ஜி.மூர்த்தி, ஜெ.ரவி, ஆர்.கோபி, ஏ.ராயப்பன், ரவிசங்கர் (போக்குவரத்து) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.