போராட்டத்தை நிறைவு செய்த போக்குவரத்து தொழிலாளர்கள்
போக்குவரத்து தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டம் 62 ஆம் நாளான சனிக்கிழமையன்று (அக்.18) சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிஐடியு தொழிற்சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை உடன்படிக்கையின் அடிப்படையில், காத்திருப்பு போராட்டத்தை நிறைவு செய்தனர். இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ப.செல்வன், மாநில குழு உறுப்பினர் எம்.சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன்,ஆர். பாரி, எஸ்.ராமதாஸ், அ.லட்சுமணன்,மாவட்ட குழு உறுப்பினர் குமரன், கணபதி, சிஐடியு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், நிர்வாகிகள் முரளி, சேகர்,பார்த்திபன், பல்வேறு தொழிற்சங்க அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
