tamilnadu

img

போராட்ட களத்தில் சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடரும் போக்குவரத்து ஊழியர்கள்

போராட்ட களத்தில் சமைத்து சாப்பிட்டு  போராட்டத்தை தொடரும்  போக்குவரத்து ஊழியர்கள்

கடலூர், செப். 2- போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் 16வது நாளாக பந்தலிலேயே சமைத்து சாப்பிட்டு காத்திருப்பு போராட்டத்தை தொடர்கின்றனர்.  போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் போக்குவரத்து ஓய்வூதியர்கள் கோரிக்கை களை வலியுறுத்தி ஆகஸ்ட் 18 முதல் தமிழக முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்ட பந்தலில் சாலை ஓரம் சமைத்து சாப்பிட்டுவிட்டு தொடர்ந்து 16வது நாளாக இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலி யுறுத்தி ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கி ணைப்புக் குழுவினர் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக திருப்பாதிரிப்புலியூர் பணிமனை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் டி.புருஷோத்தமன் தலைமை தாங்கினார். போக்குவரத்து ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.பாஸ்கரன் முன்னிலை வகித்தார். பல்வேறு ஓய்வூதியர் சங்கங்களின் சார்பில் மாநில, மாவட்டச் செயலாளர்கள் ஆர்.மனோகரன், ஐ.எம். மதியழகன், ஆர்.அசோகன், ச.சிவராமன், கோ.பழனி, ஆர். நடராஜன், கோ. சுந்தரமூர்த்தி, எஸ்.பாலகிருஷ்ணன், பி.வி.சேகர், ஏ.பாவாடை உள்ளிட்டோர்  உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பிஎஸ்என்எல் சங்கத்தின் தேசிய செயலாளர் ஆர். ஸ்ரீதர், ஐஓபி ஓய்வு பெற்ற அமைப்பின் உதவி பொதுச் செயலாளர் எம். மருதவாணன், வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.கே. வெங்கட்ரமணி, காப்பீட்டு கழக ஓய்வூதியர் சங்கத்தின் வேலூர் கோட்ட இணை செயலாளர் வி.சுகுமாரன், பிஎஸ்என்எல்இயு மாவட்ட செயலாளர் கே.விஜய் ஆனந்த் ஆகியோர் உரையாற்றினர். சங்கத்தின் மாவட்ட தலைவர் என்.காசிநாதன் நன்றி கூறினார்.