tamilnadu

img

புதிய எழுத்தறிவு திட்ட  தன்னார்வலர்களுக்கு பயிற்சி

புதிய எழுத்தறிவு திட்ட  தன்னார்வலர்களுக்கு பயிற்சி

சிதம்பரம், அக்.9 – சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. மாநில முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்ட இணை இயக்குநர் பொன். குமார் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி, ராமதாஸ், ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளவரசன் வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுநர்கள் பூங்குழலி, காமாட்சி, கதிரொளி, மலர்கொடி ஆகியோர் எழுத்தறிவு திட்டங்கள் அதன் முக்கியத்துவம் குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர். இப்பயிற்சியில் 150 க்கு மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. பயிற்சி ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர்கள் சிறப்பு ஆசிரியர் பயிற்றுநர்கள் மேற்கொண்டனர். எழுத்தறிவு திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் கதிரொளி நன்றி கூறினார்.