கரூரில் விஜய் பிரச்சாரத்தில் கோரச் சம்பவம் கூட்ட நெரிசலில் சிக்கி 33 பேர் பலியான துயரம்!
பலர் கவலைக்கிடம்; பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தகவல்
கரூர், செப்.27- கரூரில் தவெக தலைவர் விஜய்-யின் பிரச்சாரத்தில், வெயில் மற்றும் நெரிசலில் சிக்கி, 6 குழந்தைகள், 16 பெண்கள், 9 ஆண்கள் உட்பட 33 பேர் பலியான துயரச் சம்பவம் நடந்துள் ளது. மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், மா. சுப்பிரமணி யன், அன்பில் மகேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள் கரூர் விரைந்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் சனிக்கிழ மையன்று கரூர் வேலுச்சாமிபுரம் பகு தியில் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். விஜய் பொதுக் கூட்டத்திற்கு நண்பகல் 12 மணிக்கு காவல்துறை அனுமதி வழங்கியது. ஆனால் அனுமதியை மீறி மாலை யிலேயே அவர் கரூர் வந்தார். ஆனால், விஜய் பேச்சைக் கேட்பதற்காக ஆயி ரக்கணக்கான ரசிகர்கள் காலை முதலே அந்தப் பகுதியில் திரண்டு காத்திருந்தனர். ஆனால், பிரச்சாரம் நடைபெறும் இடத்திற்கு 6 மணி நேரம் தாமத மாகவே விஜய் வந்தார். இவ்வாறு 10 மணி நேரத்திற்கும் மேலாக தொண் டர்கள் உணவு, தண்ணீரின்றி வெயி லில் காத்திருந்த நிலையில், பலர் மயங்கி விழுந்தனர். 40-க்கும் மேற் பட்டோர் அடுத்தடுத்து மயக்கமடைந்தனர். அத்துடன், விஜய் பேசி முடித்த தும், ஒரே நேரத்தில் கூட்டம் கலைந்து சென்றபோது பெரும் நெரிசல் ஏற்பட்டு, அதிலும் பலர் மாட்டிக் கொண்டனர். அவர்களிலும் பலர் மயங்கி விழுந்தனர். இதனால், அடுத்தடுத்து ஆம்பு லன்ஸ் வாகனங்கள் மூலம் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர். ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் மயக்கமடைந்த நபர்கள் அனுமதிக்கப்பட்டதால் கரூர் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப் பட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், சூழல் மோசமானது. இது தொடர்பாக முதல்வருக்கு தகவல்கள் சென்ற நிலையில், அவர், கரூர் ஆட்சி யரிடம் நிலவரம் குறித்து கேட்ட றிந்த மு.க.ஸ்டாலின், பாதிக்கப் பட்டவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் உள்ளிட்டவர்களையும், அரசு அதிகாரி களையும், காவல்துறை அதிகாரிகளை யும் கூட்ட நெரிசல் நடைபெற்ற இடம் மற்றும் கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பின ருமான செந்தில் பாலாஜி கரூருக்கு உடனடியாக விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டார். இந்நிலையில், சனிக்கிழமை அன்று இரவு 9 மணி நிலவரப்படி விஜய் பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த கூட்ட நெரி சலில் சிக்கி 33 பேர் வரை உயிழந்த தாகவும், அவர்களில் 6 பேர் குழந்தை கள், 16 பேர் பெண்கள், 9 பேர் ஆண்கள் என்றும் தமிழ்நாடு மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்தார். மேலும் 45 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரு வதாகவும் அவர்களில் பலர் கவ லைக்கிடமான நிலையில் உள்ளதாக வும் மா.சுப்பிரமணியம் கூறினார். இத னால் பலி எண்ணிக்கை மேலும் அதி கரிக்கலாம் என்ற கவலை எழுந்துள் ளது. இந்த சம்பவம் முழு தமிழ்நாட்டை யும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் நிலையில், கரூரில் இருந்து வரும் செய்திகள் மிகுந்த கவலையளிப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் ஞாயி றன்று காலை கரூர் விரைகிறார். அங்கு அவர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
