சென்னை, ஜூலை 6 பெரம்பூா் மார்க்கெட் அருகே மெட்ரோ ரயில் பணி நடைபெற உள்ளது. இப்பணி காரணமாக ஜூலை7 (ஞாயிற்றுக்கிழமை) சோதனை அடிப்படையில், அந்த பகுதியில் போக்கு வரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி, மாதவரம் நெடுஞ்சாலை, மேல்பட்டி பொன்னப்பன் தெரு, லட்சுமி அம்மன் கோவில் தெருவில் இருந்து ஜவஹர் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.