வாரச்சந்தையின் அவலத்தை போக்க வியாபாரிகள் வலியுறுத்தல்
தருமபுரி, அக்.3- பென்னாகரம் வாரச்சந்தையின் அவலத்தை போக்க மாவட்ட நிர் வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என வியாபாரிகள் வலியுறுத்தி யுள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னா கரம் வாரச்சந்தையானது செவ் வாய்க்கிழமைகளில் காவல் நிலை யம் எதிரே கூட்டப்படுகிறது. இச்சந் தைக்கு சேலம், கிருஷ்ணகிரி, அஞ் செட்டி, ராயக்கோட்டை, பெங்க ளூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளிலிருந்து கால்நடைகளை சந் தைப்படுத்தவும், பென்னாகரம் மற் றும் அதன் சுற்றுவட்டார பகுதிக ளில் விளைவிக்கக்கூடிய காய்கறி களை சந்தைப்படுத்தவும் ஏராள மான வியாபாரிகள் வந்து செல்கின் றனர். பழமை வாய்ந்த இந்த வாரச் சந்தையை புதுப்பிக்கும் வகையில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.32 கோடி மதிப் பீட்டில், மேற்கூரையுடன் 224க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான கடை கள், பேவர் பிளாக் நடைபாதை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு, கடந்த சில மாதத்திற்கு முன்பு திறக் கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட வாரச் சந்தையில் காய்கறிகடை, பழக் கடை, மிளகாய் கடை, மளிகை கடை உள்ளிட்ட பல்வேறு கடை கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நி லையில், புதிதாக அமைக்கப்பட்ட வாரச்சந்தையில் பேரூராட்சி அலு வலரின் அனுமதியின்றி, இரவோடு இரவாக தனி நபர்கள் தகர சீட் அமைத்துள்ளனர். மேலும், பேவர் பிளாக் நடைபாதையின் கற்கள் உடைக்கப்பட்டுள்ளது. குப்பைத் தொட்டிகள் வைக்காததால் பல் வேறு இடங்களில் காய்கறி கழிவு கள் காணப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசி வருவதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், வாரச்சந்தை பகுதியில் கட்டப்பட்ட பொது சுகாதார கழிப்பி டமானது முறையாக பராமரிக்கா ததால், கழிப்படத்தின் கதவுகள், தண்ணீர் குழாய், டைல்ஸ் உடைக் கப்பட்டுள்ளதால் சந்தைக்கு வருப வர்கள் கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. வாரச் சந்தை பகுதியை சுற்றியுள்ள குடி யிருப்பு பகுதிக்கு அருகில் பொது மக்களின் எதிர்ப்பையும் மீறி கட்டப் பட்ட பொது சுகாதார கழிப்பிடத் தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் குடியிருப்பு பகுதிகளுக்கு இடையில் செல்லக்கூடிய சாக் கடை கால்வாயில் செல்வதால் அப் பகுதியில் துர்நாற்றம் வீசி, நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இத னால் பொதுமக்கள் கழிப்பிடத்தை பயன்படுத்தாமல் சந்தை அருகே திறந்தவெளியில் இயற்கை உபா தைகளை கழிக்கின்றனர். புதிதாக அமைக்கப்பட்ட மேற்கூரை கட்ட டத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டும் மின்விளக்குகள் அமைக்கப்பட் டுள்ளதால், சில இடங்களில் இருள் சூழ்ந்துள்ளது. இதனை பயன்ப டுத்திக் கொண்டு மது பிரியர்கள் இரவு நேரங்களில் குடிசை அமைத்து மது அருந்தும் இடமாக மாற்றி வருகின்றனர். வியாபாரிக ளுக்கு கடைகள் அமைக்க போது மான இடவசதி இல்லாதபோது, அங்குள்ள இடத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே, சந்தையில் உள்ள வியாபாரிகளின் நலன் கருதி பேரூ ராட்சி நிர்வாகம் தேவையில்லாத ஆக்கிரமிப்புகளை அகற்றி, சந்தை யில் உள்ள வியாபாரிகளுக்கு தேவையான வசதி செய்துதர வேண்டும். கழிவறையை முறை யாக பராமரிப்பு செய்து, குவிந் துள்ள குப்பைகளை அகற்ற வேண் டும் என அங்குள்ள வியாபாரிக ளும், பொதுமக்களும் மாவட்ட நிர் வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.
