தேக்கடி, மூணாறில் படகு சவாரிக்கு தடை
இடுக்கி, மார்ச் 13- கோவிட்-19 அச்சுறுத்தலைத் தொடர்ந்து பன்னாட்டு சுற்றுலாத் தலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் தேக்கடி, மூணார் உள்ளிட்ட கேரளத்தில் முக்கிய சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோ டின. சுற்றுலா பயணிகளுக்கு விருப் பமான படகு சவாரி போன்றவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. படகுகள் அனைத்தும் முடங்கி கிடக்கின்றன. வனத்துறை மூன்று ஆண்டு களுக்கு முன்பு தேக்கடி பூங்காவை மூடியதும். தனியார் வாகன நிறுத் தங்கள் நிறுத்த தடை விதித்ததும் தேக்கடி சுற்றுலாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இப்போது கோவிட் 19 முன்னெச்சரிக்கையாக படகு சவரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேக்கடியில் சுற்றுலாப் பயணி களின் வருகை நின்றுபோனதால் அதனுடன் தொடர்புடைய நூற்றுக் கும் மேற்பட்ட பெரிய ரிசார்ட்டுகள், சுற்றுலா பயணிகள் தங்கும் முந் நூறுக்கும் மேற்பட்ட வீடுகள், ஐம்பது க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட வியாபாரம் போன்றவை பெரும் நேருக்கடியை சந்தித்துள்ளன. ஆட்டோ, டாக்சி ஓட்டிப்பிழைக் கும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோ ரையும், வங்கி உள்ளிட்ட துறைகளை யும் கேவிட் 19 கடுமையாக பாதித்துள் ளது. குமுளி, மூணாறு உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களையும் பாதித்துள்ளது. பன்னாட்டு சுற்றுலா தலமான மூணாறுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை முற்றாக நின்றுவிட்டது. வனவிலங்கு சரணாலயம் இனப் பெருக்கத்திற்காக 21 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது.