tamilnadu

சென்னை, திருவள்ளூர் முக்கிய செய்திகள்

ரூ.30 லட்சம் மதிப்பில் போதை பொருள் பறிமுதல் 
ராயபுரம்,செப்.21-சென்னை, மண்ணடியில் போதை பொருள் விற்பதாக எஸ்பிள னேடு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் வெள்ளியன்று (செப்.21) அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, மெத்தா பிட்டமின் என்ற போதை பொருளை விற்ற மண்ணடி, அய்யப்பத் தெருவை சேர்ந்த அபுரார், மதுரவாயல், கிருஷ்ணன் நகரை சேர்ந்த முகமது ஹரிஸ் (40) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 125 கிராம் மெத்தாபிட்டமின் போதை பொருளை பறிமுதல் செய்தனர். மெத்தாபிட்டமின் போதை ப்பொருள் இந்திய கள்ளச்சந்தை யில் ஒரு கிலோ, ரூ. 15 லட்சம் என கூறப்படுகிறது.
12 பேர் கைது
மீஞ்சூர், பொன்னேரி, சோழவரம் பகுதிகளில் வழிப்பறி கொள்ளை, கஞ்சா விற்கும் கும்பலை பொன்னேரி காவல்துறை தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். மீஞ்சூர் அடுத்த அனுப்பம்பட்டு ரயில் நிலையத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அனுப்பம்பட்டை சேர்ந்த கார்த்திக், தேவதானம் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா, தோட்டக்காடு மேட்டுக் காலனியைச் சேர்ந்த பூவரசன், பிரகாஷ்ராஜ், தாங்கல் பெரும்புலம் பகுதியைச் சேர்ந்த வல்லரசு என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். பழவேற்காடு பகுதியில் முட்புதரில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த தமிம்சா, பயாஸ், நந்தபாலன், சேக் தாவுத் ஆகியோரை திருப்பாலைவனம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர் அவர்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. சோழவரம் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த காந்தி நகரை சேர்ந்த உதயா, அழிஞ்சி வாக்கம் அத்திபேடு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், தீபன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மழை நீர் தேங்கிய பள்ளத்தில் விழுந்த குழந்தை பலி
மீஞ்சூர்,செப்.21- மீஞ்சூர் அடுத்த காட்டூர் காலனியை சேர்ந்தவர் ராஜ்குமார். கூலித்தொழி லாளி. இவரது 3 வயது மகன் பர்வேஷ். வெள்ளியன்று (செப்.20) குழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டி ருந்தது. திடீரென்று குழந்தையை காணாத தால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து அப்பகுதியில் தேடினர். அப்போது அங்கு பள்ளத்தில் தேங்கியிருந்த மழை நீரில் குழந்தையின் உடல் மிதந்தது கிடந்தது. இதைபார்த்து அலறிய பெற்றோர் குழந்தையை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். குழந்தை பர்வேசை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.