tamilnadu

img

டாம்கால் ஊழியர்கள் போராட்டம் வெற்றி ஆட்சியர் அறிவித்த கூலி வழங்க முடிவு

டாம்கால் ஊழியர்கள் போராட்டம் வெற்றி ஆட்சியர் அறிவித்த கூலி வழங்க முடிவு

திருப்போரூர், செப்.11- திருப்போரூர் ஆலத்தூர் தொழிற்பூங்கா வில் செயல்படும்  டாம்கால் தொழிற்சாலை யில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் குறைந்த பட்சம் கூலியும், அடிப்படை வசிதிகள் ஏதும் இன்றி 12 மணி நேரம் பணியாற்றி வருகின்றனர். நிர்வாகத்தால் ஒப்பந்த முறையில் பணி அமர்த்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக 200-ம் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் செங்கை பொதுத் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) இந்நிறுவன தொழிலாளர்களால் துவங்கப்பட்டது. நிரந்தர தொழிலாளர்கள் செய்கின்ற பணியே ஒப்பந்த தொழி லாளர்கள் செய்கின்றனர். எனவே சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கேட்டும், போனஸ், சட்ட விரோத மிகை பணி செய்ய கட்டாய படுத்தகூடாது, கேண்டின், போக்குவரத்து வசதி உள்ளிட்ட பொது கோரிக்கை நிறைவேற்ற கோரியும் நிர்வாகத்திடம் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. நிர்வாகம் அழைத்து பேசி தீர்வு காணாததால் செங்கல்பட்டு தொழிலாளர் துணை ஆணையர் முன்னிலையில் 2K தொழிற்தாவா எழுப்பப்பட்டது.  இதனடிப்படையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தொழிலாளர் துணை ஆணையர் மிகை நேர பணி செய்ய கட்டாய படுத்த கூடாது என்றும் குறைந்த பட்சம் கூலி மாவட்ட ஆட்சியர் கூலி கொடுக்க வேண்டும் என்று நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கினார்.  நிர்வாகம் அறிவுரையை ஏற்று கொண்டது. அதன் அடிப்படையில் மிகை நேர பணி நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது மாவட்ட ஆட்சியர் அறிவித்த கூலி தொழி லாளர்களுக்கு அடுத்தமாதம் 5ஆம் தேதி முதல் வழங்குவதாக நிர்வாகம் அறி வித்துள்ளது இந்த அறிவிப்பை தொழி லாளர்களுக்கு விளக்கும் கூட்டம் ஆலை நுழை வாயிலில் செவ்வாயன்று (செப்,10 நடைபெற்றது இதில் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பகத்சிங் தாஸ் விளக்கி பேசினார்.