tamilnadu

img

நீட் தேர்வை ரத்து செய்ய விரைந்து நடவடிக்கை எடுத்திடுக!

சென்னை, ஜூன் 29- மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களின் நலன் கருதி தேசிய  அளவில் நீட் தேர்வை ரத்து செய்  திட வலியுறுத்தி ஜூன் 28 அன்று  சட்டமன்றப் பேரவையில் ஒருமன தாகத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிர தமர் நரேந்திர மோடிக்கு இத்தீர்மா னத்தை இணைத்து இதுதொடர் பாக கடிதம் ஒன்றையும் எழுதியுள்  ளார். அதன் விவரம் பின்வருமாறு: மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வி லிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழ்நாட்  டின் தொடர்ச்சியான கோரிக்கை யை மீண்டும் வலியுறுத்துவதாக வும் தேசிய அளவில் இந்தத் தேர்வு  முறையை ரத்து செய்ய வேண்டு மென வலியுறுத்துகிறோம். தொழிற்கல்வி படிப்புகளுக் கான சேர்க்கை 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும். தனி நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை இருக்கக்கூடாது.

மாறாக நீட் தேர்வு முறை மாண வர்களுக்குத் தேவையற்ற கூடு தல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பது தமிழ்நாட்டின் கருத்தா கும். அந்த வகையில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கவும் 12 ஆம் வகுப்பு மதிப்  பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற் கொள்ளவும். தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் ஒருமன தாக தீர்மானம் நிறைவேற்றப்பட் டுள்ளது. இதுதொடர்பான சட்ட முன்வடிவு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் இதுநாள் வரையில் அக்கோப்பு நிலுவையில் உள்ளது.

சமீபத்தில் நடந்த நீட் தேர்வின் போது நடைபெற்ற முறைகேடுகள் நீட் தேர்விற்கெதிரான தமிழ்நாட் டின் நிலைப்பாட்டினை உறுதிப் படுத்தியுள்ளது. பல மாநிலங்களும்  இந்தத் தேர்வு முறையை ரத்து  செய்யவேண்டியதன் அவசியம்  குறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளன. இவற்றையெல்லாம் கருத்தில்  கொண்டே, தமிழ்நாடு சட்டமன்றப்  பேரவையில் நீட் தேர்வு முறையை ரத்து செய்திட ஒன்றிய அரசை வலி யுறுத்தி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

எனவே, நீட் தேர்விலிருந்து  தமிழ்நாட்டிற்கு விலக்களிப்பதற் கான சட்டமுன்வடிவிற்கு ஒன்றிய  அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.  தேசிய அளவில் நீட் தேர்வு முறை யைக் கைவிடும் வகையில் தேசிய  மருத்துவ ஆணையச் சட்டத்தில் உரிய திருத்தங்களை ஒன்றிய அரசு  மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் நகல், இக்கடிதத்துடன் இணைக் கப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி விரைந்து தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் தமது கடி தத்தில் குறிப்பிட்டுள்ளார்.