tamilnadu

img

பழங்குடி பட்டியலில் வேட்டைக்காரன் இன மக்களை சேர்க்க வேண்டும் திருவண்ணாமலை மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

பழங்குடி பட்டியலில் வேட்டைக்காரன் இன மக்களை சேர்க்க வேண்டும்

திருவண்ணாமலை மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

திருவண்ணாமலை, ஆக.11- தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் திரு வண்ணாமலை மாவட்ட மாநாடு கன்னக்குறிக்கை கலைஞர் நகரில் நடைபெற்றது. எ.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் பி.லட்சுமணன் வேலை அறிக்கையும், பொருளாளர் ரவிச்சந்திரன் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தனர். ராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் எம்.ஏழுமலை, மாநிலப் பொருளாளர் ஜி.ஏழு மலை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில பொதுச்செயலாளர் இ.கங்காதுரை நிறைவுரையாற்றினார். மலைவாழ் மக்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் விஜயா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிர்வாகிகள் தேர்வு சங்கத்தின் மாவட்டத் தலைவராக எ.கிருஷ்ணன், செயலாளராக பி.லட்சு மணன், பொருளாளராக சி.ரவிச்சந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  தீர்மானம் வேட்டைக்காரன் மக்களை பழங்குடி பட்டியலில் சேர்ப்போம் என்ற தேர்தல் கால வாக்குறுதியை நிறை வேற்ற வேண்டும், வேட்டைக்காரன் மக்களுக்கு வீடு, வீட்டுமனை பட்டா, தொகுப்பு வீடு வழங்க வேண்டும், பள்ளி கட்டிடம், ரேசன் கடை, மயானம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.