tamilnadu

img

ஆதிச்சநல்லூரில் தேர்வாணைய தலைவர் பார்வை

தூத்துக்குடி, ஜன.13- ஆதிச்சநல்லூரை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் அருள்மொழி பார்வையிட்டார். தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்ச நல்லூர் உலக நாகரீகத்தின் தொட்டில். இங்கு இந்தியாவிலேயே முதல் முதலில் அகழாய்வு நடந்தது. அதன் பின் 1902லிலும் 1903லிலும்அகழாய்வு நடந்தது. இந்திய தொல் பொருள் ஆராய்ச்சி கழகத்தின் மூலம் 2004ல் அகழாய்வு நடந்தது. ஆனால் இதன் அறிக்கை இதுவரை வெளிவர வில்லை.  இதற்கிடையில் மாநில அரசு இந்த மாதம் ஆதிச்சநல்லூர், சிவகளை, தாமிரபரணி கரையில் உள்ள பல இடங்களில் அகழாய்வு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கிடையில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) தலைவர் டாக்டர் அருள்மொழி ஆதிச்சநல்லூரை பார்வையிட வந்தார். ஆதிச்சநல்லூர் குறித்து எழுத்தாளர் முத்தாலங் குறிச்சி காமராசு விளக்கி கூறினார். அவருடன் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சி யர் சந்திரன்,தூத்துக்குடி சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் தாமஸ் பயஸ் அருள் ஆகியோர் உடன் வந்தனர். அவர் ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழி உள்ள இடம், புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் கட்டிடம் உள்படபல இடங்களை பார்வை யிட்டார்.

;