tamilnadu

img

பெண்கள் பணிசெய்யும் இடங்களில் புகார் பெட்டி அமைக்க வேண்டும் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு வலியுறுத்தல்

செங்கல்பட்டு, மே 14-பெண்கள் பணி செய்யும் இடங்களில் புகார் பெட்டி அமைக்க வேண்டும் என உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு வலியுறுத்தியுள்ளது. உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின்காஞ்சிபுரம் மாவட்ட 8 ஆவதுமாநாடு செங்கல்பட்டில் கட்டுமான உழைக்கும் பெண்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.கலைச்செல்வி தலைமையில் செவ்வாயன்று (மே 14) நடைபெற்றது. அமைப்பின் கொடியை மாவட்ட நிர்வாகி ஆர்.பிரேமா ஏற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் சவுந்தரி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். ஐசிடிஎஸ் மாவட்டச் செயலாளர் கெஜலட்சுமி வரவேற்றார்.  ஐசிடிஎஸ் மாநில துணைத் தலைவர்சித்திரச்செல்வி துவக்கிவைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.வசந்தா வேலை அறிக்கையை வாசித்தார்.சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன், செயலாளர் இ.முத்துக்குமார், மின்வாரிய உழைக்கும்பெண்கள் ஒருங்கிணைப்பாளர் நாகலட்சுமி, கட்டுமான தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் டி.பாபு உள்ளிட்டோர் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து சிஐடியு மாநிலபொருளாளர் மாலதிசிட்டிபாபு பேசினார். தையல் கலைஞர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் புஸ்பலதா நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

ஊதியம் வழங்கிட வேண்டும், குறைந்த பட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும், பெண்கள் பணி செய்திடும் இடங்களில் புகார் பெட்டி அமைத்திட வேண்டும், ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்த வேண்டும், கட்டுமான அமைப்புச்சாரா பெண்தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், நிர்பயா நிதியில் சேர்ந்துள்ள பணத்தைப் பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள்

மாவட்ட அமைப்பாளராக எம். கலைச்செல்வி உள்ளிட்ட 23 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.

;