tamilnadu

img

மூடிக்கிடக்கும் கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வருக

 சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி, டாக்டர் கோவிந்தன் தெருவில் உள்ள பொதுக்கழிப்பிடம் நீண்ட நாட்களாக மூடி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கழிப்பிடத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், ரிச்சி தெரு கிளை சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கிளை செயலாளர் சாமுவேல் தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தை சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டப் பொருளாளர் ஜெ.பார்த்திபன் தொடங்கி வைத்தார். பகுதிச் செயலாளர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.