சுடுகாட்டுப்பாதை இல்லை
தி.மலை, நவ.10- திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த, படவேடு ஊராட்சிக்கு உட்பட்ட மல்லிகாபுரம் மற்றும் கமண்டலாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்ற னர். இக்கிராமத்தைச் சேர்ந்தவர்களில் யாரேனும் இறந்துவிட்டால், கமண்டல நதியைக் கடந்து சென்று தான் புதைக்கவோ, எரிக்கவோ செய்கின்றனர். மழைக்காலங்களில் ஆற்றில் தண்ணீர் நிற்பதால் சடலங்களை எடுத்துச் செல்வது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக கிராமக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு, மழைக்காலத்தில் இந்த கிரா மத்தில் ஒருவர் இறந்து விட்டார். கழுத்தளவு தண்ணீ ரில் பிணத்தை கிராம மக்கள் கொண்டு சென்ற காட்சி, பல்வேறு தொலை க்காட்சிகளிலும், பத்திரிகை களிலும் வெளியானது. அப்போது, திரு வண்ணாமலை மாவட்ட ஆட்சியர் இந்த கிராமங்க ளுக்கான மயான பாதையை உடனடியாக சரிசெய்ய உள்ளாட்சித் துறைக்கு உத்தரவிட்டார். பின்னர் படவேடு ஊராட்சி நிர்வாகம், கமண்டலநதியில் பாதை மற்றும் இடுகாடு அமைப்பதற்கு உண்டான இடத்தை அளவீடு செய்த னர். ஆனாலும், மயான பாதை அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. ஒரு ஆண்டுக்கும் மேலாகியும் துவங்கிய இடத்திலேயே பணிகள் நிற்கிறது என கிராம மக்கள் குற்றம் சாட்டு கின்றனர். இந்நிலையில் இந்த கிரா மத்தில் வசித்த சின்ன க்குழந்தை (71) உடல் நலமின்றி சனிக்கிழமை யன்று இறந்தார். ஆற்றில் தண்ணீர் இடுப்பளவு தண்ணீர் செல்லும் நிலையில் சின்னக்குழந்தையின் உடலை தண்ணீரில் மிதந்து எடுத்துச் சென்றனர்.