மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் நடத்தி மக்கள் சந்திப்பு கிளர்ச்சி பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக வெள்ளியன்று (ஜூன் 13) வேளச்சேரி ஏரிக்கரையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் கலந்து கொண்டார். வேளச்சேரி பகுதிக்குழு உறுப்பினர் பாரதிராணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பகுதிச் செயலாளர் எஸ்.முகமதுரஃபி, மாவட்டக்குழு உறுப்பினர் என்.குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.