tamilnadu

img

ஐசிஎப்  அனைத்து தொழிற்சங்க போராட்டம்

அக்டோபர் 23 ஆம் தேதியை அகில இந்திய கருப்பு தினமாக அனுசரிக்கும் வகையில் ஐசிஎப்  அனைத்து தொழிற்சங்க போராட்டக்குழு (ஏஐஆர்எப்)  ரயில்வேயை  தனியாருக்கு விடும் உத்தரவு நகலை எரித்து புதனன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஏஐஆர்எப் ஐசிஎப் மண்டல பொதுச் செயலாளர்  பி.மோகன் தாஸ் தலைமை தாங்கினார். எம்.கே.சுகுமார் (என்எப்ஐஆர்), வி.முரளி தரன் (திமுக), பா.ராஜாராம் (யூனைட் டெட் ஒர்க்கர்ஸ்யூனியன்), ஜி.மகேந்திரன் (கார்மிக்), டி.ராஜேந்திரன் (ஏஐடியுசி), லட்சுமிநாராயணன் (அண்ணா), மணி (எஸ்சி, எஸ்டி), எஸ்.பார்த்தசாரதி (ஓபிசி), எஸ்.கோபிநாத் (ஐஆர்டிஎஸ்ஏ), என்.எஸ்.மகேஷ்பாபு, (எம்பிளாயீஸ் யூனியன்), எம்.வெங்கட்ராவ்(மினிஸ்டிரியல்), கார்த்திக் (ஐஎஸ்சி), அன்பழகன் (ஏஐஆர்எப்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.