tamilnadu

img

தனியார்மயத்திற்கு எதிராக போராட்டம் வெடிக்கும் சிஐடியு தென்சென்னை மாநாட்டில் ஜி.சுகுமாறன் எச்சரிக்கை

சென்னை, ஜூன் 22 - தனியார்மயத்திற்கு எதிரான போராட்டம் வெடிக்கும் என்று சிஐடியு மாநிலப் பொதுச் செயலா ளர் ஜி.சுகுமாறன் எச்சரித்துள்ளார். சிஐடியு தென்சென்னை மாவட்ட 14வது மாநாடு சனிக்கிழமையன்று (ஜூன் 22) சைதாப்பேட்டையில் தொடங்கியது. 23ந் தேதியும் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து ஜி.சுகு மாறன் பேசுகையில், அமெரிக்காவில் டிரம்ப் தொடங்கி மோடி வரை வலது சாரி சக்திகள் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் திசைதிருப்பியே வெற்றி பெற்றுள்ளன. மோடி அரசு தற்போது கிடைத்துள்ள பெரும்பான்மையை பயன்படுத்தி கடந்த ஆட்சி யில் கிடப்பில் போடப்பட்ட தொழிலாளர் விரோத மசோ தாக்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது என்றார். பாஜக அரசு விவசாயம், மீன்பிடி, முடிவெட்டுவது உள்ளிட்ட அனைத்து தொழில்களையும் கார்ப்ப ரேட்மயமாக்கமாக்க உள்ளது. எனவே, தனி யார்மயமாக்களின் உச்ச கட்டத்திற்கு வந்துள்ளது. 40 பொதுத் துறை நிறு வனங்களை தனியார்மய மாக்க உள்ளது. ரயில்வேயையும் தனி யார்மயமாக்க உள்ளனர். இதற்கெதிரான போராட்ட ங்கள் வெடிக்கும். பெரு ம்பான்மை இருந்தாலும் மோடி நினைப்பது போன்று 5 வருடம் ஆட்சி நடத்த முடி யாது. அதை தொழிலாளி வர்க்கம் அனுமதிக்காது என்றும் அவர் கூறினார். பன்னாட்டு நிறுவனங்க ளில் அதிகளவு தொழிற்சங்க ங்களைக் கொண்டுள்ள அமைப்பு என்ற பெருமை சிஐடியு-விற்கு உள்ளது. அது பல்வேறு பழிவாங்கலுக்கு பிறகே தொழிலாளி வர்க்கம் சாதித்துள்ளளது. சென்னையின்அடையாள மாக உள்ள மெட்ரோ ரயி லில் கூட தொழிற்சங்கம் அமைத்தால் பழிவாங்கப்படு கின்றனர். இவற்றை யெல்லாம் முறியடித்து தொழிலாளி வர்க்கம் வெல்லும் என்றும் அவர் கூறினார். பொதுமாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் இ.பொன்முடி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் எம். சந்திரன் கொடியேற்றினார். துணைச் செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் வரவேற்க, துணைச் செய லாளர் பி. சுந்தரம் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வேலை-ஸ்தாபன அறிக்கையை பொறுப்புச் செயலாளர் பா. பாலகிருஷ்ணனும், வரவு செலவு அறிக்கையை ஏ.பழனியும் சமர்ப்பித்தனர்.

;