tamilnadu

திமுக கூட்டணிக்கு  51 விழுக்காடு வாக்குகள்

சென்னை, மே 24-தமிழ்நாட்டில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 150 பேர் எந்த வேட்பாளர்களையும் விரும்பாமல் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 38 மக்களவைத் தொகுதிகளில் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி மொத்தம் பதிவான வாக்குகளில் 2 கோடியே 15 லட்சத்து 96 ஆயிரத்து 481 (51.5 விழுக்காடு) வாக்குகளை பெற்றது. அதிமுக கூட்டணி 1 கோடியே 26 லட்சத்து 6 ஆயிரத்து 636 வாக்குகளை (29.8 விழுக்காடு) பெற்றது.மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக ஆகிய கட்சிகள் மொத்தமாக 72 லட்சத்து 50 ஆயிரத்து 210 (17.1 விழுக்காடு) வாக்குகளை பெற்றுள்ளன. 5 லட்சத்து 41 ஆயிரத்து 150 பேர் (1.3 விழுக்காட்டினர்) நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். திருப்பூர் தொகுதியில் மட்டும் 21 ஆயிரத்து 861 பேர் நோட்டாவுக்கு வாக்களித்தனர். இதேபோல் 22 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தல்களிலும் 47 ஆயிரத்து 191 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.