tamilnadu

img

தூக்கம் விலகி மூளை உற்சாகமாகிவிடும்

கார்ப்ரேட் களவாளிகளின் கைக ளில் ஊடகங்கள் சிக்கியுள்ளதை அரசி யல் உணர்ந்த அணைவரும் அறிவர். இக்காலத்தில் மோடியின் ஊது குழ லாய் ஊடகங்கள் மாறி, ‘கோடி மீடியா’ வாக வலம் வருகிறது. வலதுசாரி களின் பொய்ப்பிரச்சாரத்தை உண்மை யாக்க இவைகள் முயற்சித்துக்கொண் டிருக்கிறது. உழைக்கும் மக்களின் குரலை போகிற போக்கில் கூட சொல்வ தற்கு இவைகள் தயாராக இல்லை என் பது இன்றைய நிதர்சனம்.  

வாட்ஸ்அப் யுனிவர்சிட்டிகளின் வதந்திகளை வாந்தி எடுப்பதே புரட்சி கர சிந்தனை என்கிற தோற்றத்தை உரு வாக்கும் முனைப்பில் கார்ப்ரேட் ஊடகங்கள் செயல்பட்டிருக்கிற நிலை யில், உழைக்கும் மக்களின் குரலை, பட்டியலின, பழங்குடியினர், பெண்கள்,  சிறுபான்மையினர் என ஒடுக்கப்பட் டவர்களின் குரலை ஒலிப்பதற்கென்றே உருவானது தீக்கதிர். இது எந்த காலத் திலும் தன்னுடைய கொள்கையில் இருந்து சற்றும் சமரசம் செய்யாமல் வீறு  நடை போட்டு வருகிறது.

இத்தகைய உழைக்கும் மக்க ளின் நாளேடு, ஊடக உலகில் உண்மை யின் பேரோளியான தீக்கதிர் நாளித ழின் தீவிர சந்தா சேர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இயக்கமாகவே முன் னெடுத்து வருகிறது. தமிழகம் முழு வதும், ஜூலை 1 முதல் 10 வரை தீவிர சந்தா சேர்ப்பு இயக்கம் மாநிலம் முழு வதும் துவங்கி வெற்றிகரமாக நடந்து வருகிறது.  இந்த சந்தா சேர்ப்பு இயக்கத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு  பல்வேறு சுவராஸ்யமான அனுபவங்கள் கிடைத் துக்கொண்டிருக்கிறது.  

இதன்ஒருபகுதியாக, ஈரோடு மாவட் டம் அந்தியூரில் தாலுகா செயலாளர் முருகேசன் தலைமையில் சென்ற குழு வினர் செல்கையில், 70 வயதைக் கடந்த தீக்கதிர் வாசகர் ஆர்.ராம சாமி, தீக்கதிர் நாளிதழ் குறித்து தோழர்க ளுடன் அவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.  தமிழ் நாடு காவல்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்  ஆர்.ராமசாமி. கடந்த பல ஆண்டுக ளாக தீக்கதிர் வாங்குகிறார். உணர்வுப் பூர்வமாக தீக்கதிரை வாசிப்பதாக சொல்லும் அவர், சிறுவயது முதலே திராவிட இயக்க கொள்கைகள் மீது பற்றுகொண்டவன், ஏதோ ஒருவகை யில் தீக்கதிர் எனக்கு அறிமுக மாகியது. இப்போது தீக்கதிர் என்னை ஆட்கொண்டு விட்டது.

 தினசரி தீக்கதிரில் வரும் செய்தி, கட்டுரைகள் என அனைத்தையும் வாசிக் கிறேன். அவற்றில் இருந்து நுணுக்க மான கருத்துகளை குறி்ப்புகளாக எடுத்து உள்ளூர் கட்சித் தோழர்களி டத்தில் பகிர்ந்து கொள்வதாகவும், தீக் கதிர் செய்திகளில் வரும் பெயர்கள் அனைத்திற்கும் தவறாமல் இன்சியல் இருக்கும் அதுதான் தீக்கதிரின் தனிச் சிறப்பு என்கிறார். மேலும் இவர் தனது  சக நண்பர்களையும் தீக்கதிரை வாசிக் கச்செய்கிறார்.

அவ்வாறு வாசிப்ப வரில் ஒருவர் 80 வயதைக் கடந்த வராம் அவர் ஒருநாளைக்கு இரண்டு மூன்று முறை தீக்கதிரை வாசித்து விடு வாராம். உட்கார்ந்து கொண்டே இருப் பதால் எனக்கும் தூக்கம் வருவது போல  தோன்றினால் தீக்கதிரை எடுத்து விரித்தால் தூக்கம் விலகி மூளை உற்சா கம் பெற்றுவிடும் என்று சொல்வதாக பெருமைப்பட்டார். “ஒவ்வொரு வீட்டி லும் தீக்கதிர் பத்திரிக்கையை வாசிக் கும் நிலை வந்துவிட்டால், தேர்தல் பிரச் சாரமே தேவையில்லை, மக்கள்  சரியான அரசியலுக்கு வாக்களித் துவிடுவார்கள்” என்று உறுதிபட தெரி வித்தார்.