tamilnadu

img

அண்ணாமலை பல்கலை கழக தினக்கூலி ஊழியர்கள் கே.பாலகிருஷ்ணனுக்கு நன்றி!

அண்ணாமலை பல்கலை கழக தினக்கூலி ஊழியர்கள் கே.பாலகிருஷ்ணனுக்கு நன்றி!

சிதம்பரம், ஜூலை 16- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழ கத்தில்  கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த  தினக்கூலி ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்ட ஊதியம்   சிபிஎம் அரசியல்  தலைமைக்குழு உறுப்பினர் கே.பால கிருஷ்ணன் வலியுறுத்தலின் பேரில் கிடை த்ததற்கு ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி இவர்கள் போராடிய போது  கே. பாலகிருஷ் ணன் தலைமை தலைமைச் செயலாளரை  தொடர்பு கொண்டு கடைநிலையில் உள்ள இவர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது  என்றும் படிப்படியாக பணி நிரந்தர செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.  இதன் அடிப்படையில்  முதற்கட்டமாக ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்ட2 மாத சம்பளம் வழங்கப்பட்டது. இதையடுத்து  பல் கலைக்கழக என்எம்ஆர், தினக்கூலி ஊழியர் களின் நிர்வாகிகள்  கே.பாலகிருஷ்ணனை சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரி வித்தனர். அப்போது சிபிஎம் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாபு உடன் இருந்தார்.