டாடா மின்னணு தொழிற்சாலையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் பணி நிரந்தரம், சம்பள உயர்வு வழங்க கோரிக்கை
கிருஷ்ணகிரி, செப்.23- சம்பள உயர்வு, பணி நிரந்தரம், பெண் தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகள் கேட்டு சூளகிரி அருகே டாடா மின்னணு தொழிற் சாலையில் தூய்மை பணியாளர்கள் 2 ஆம் நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் ஒன்றி யம் நாகமங்கலம் அருகே டாடா எலக்ட்ரானிக்ஸ் பெரு நிறுவனம் துவங்கப்பட்டது. அப்போது, நூற்றுக்கணக் கான விவசாயிகளின் பட்டா நிலங்கள் (1600 ஏக்கர்) கட்டாயப்படுத்தி அடிமாட்டு விலைக்கு தொழிலில் வளர்ச்சி எனும் பெயரில் கையகப்படுத்தப்பட்டது. உரிமைகள் மறுப்பு மிகக் கடுமை யாக வேலை வாங்கப்படும் தூய்மை பணியாளர்க ளுக்கு ரூ.13 ஆயிரம் வரையே ஊதியம் வழங்கப் படுகிறது. ஆண்டுக்கு ஒரே யூனிபார்ம் மட்டுமே வழங்குகிறார்கள். அதை தினமும் அணிந்து வரும்படி கட்டாயப்படுத்துகிறார்கள், மூன்று தொழிலாளர்கள் செய்ய வேண்டிய வேலையை ஒருவரே செய்ய நிர்பந்திகின்றனர். நிர்வாகத்தின் பேருந்து களில் ஏற்றுவதில்லை. 700 க்கும் மேற்பட்ட திரு மணமான பெண் தொழி லாளர்கள் உள்ள நிலை யில் ஓய்வு அறை இல்லை, மருத்துவ வசதிகள் கிடை யாது, சிறிது நேரம் கூட ஓய்வு விடப்படுவதில்லை. காய்ச்சல், தலைவலி என்றால் மட்டுமே பயன்படும் அளவில் உள்ளது இஎஸ்ஐ மருத்துவமனை. அதுவும் 35 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ளது. ஒரு நாள் வேலைக்கு செல்ல வில்லை என்றாலும் ரூ.1000 சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. கோரிக்கைகள் இந்நிலையில், ஒரு சீருடை கூடுதலாக தர வேண்டும், விடுமுறை எடுக்கும் போது ஆயிரம் ரூபாய் பிடிப்பதை கைவிட வேண்டும், தொழிற்சாலை பேருந்தில் வந்து செல்ல அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கடந்த 3 ஆண்டு களில் 3 முறை தொழி லாளர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். சிஐடியு ஆதரவு இந்நிலையில், செப். 22 முதல் தூய்மை பணி யாளர்கள் வேலைக்கு செல்வதை புறக்கணித்து தொழிற்சாலை அருகில் கூடி யுள்ளனர். இரு நாட்க ளாக அங்கேயே சமைத்து சாப்பிட்டு தங்கி வரு கின்றனர். இந்த தகவல் அறிந்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் முரு கேசன் தலைமையில் சிஐடியு தலைவர்கள் வாசு தேவன், பி.ஜி. மூர்த்தி, சிபிஎம் மாவட்டச் செய லாளர் சுரேஷ், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் இளவரசன் ஆகியோர் தூய்மை பணி தொழி லாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இன்று சாலை மறியல் இதையடுத்து, தொழிற் சாலை ஒப்பந்ததாரர்கள், நிர்வாக அதிகாரிகள் தொழி லாளர்களை சந்தித்தனர். அப்போது, தூய்மை பணியாளர்கள் அனைத்து பகுதிகளில் இருந்தும் தொழிற்சாலை பேருந்தில் வந்து செல்ல அனுமதிப்பதாக கூறினர். அப்போது, அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். இதையடுத்து, தொழிற்சாலை நிர்வாகத்தினர் அங்கிருந்து புறப்பட்டனர். இதையடுத்து, சிஐடியு தலைவர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் புதன்கிழமை (செப்.24)போராடிக் கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு ஆதர வாக சாலை மறியலில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளனர்.