tamilnadu

img

பணி நிரந்தரம் செய்ய வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் சங்க விழுப்புரம் மாவட்ட மாநாடு கோரிக்கை

ணி நிரந்தரம் செய்ய வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் சங்க  விழுப்புரம் மாவட்ட மாநாடு கோரிக்கை

விழுப்புரம், ஆக.16- விழுப்புரத்தில் நடைபெற்ற டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட மாநாட்டில் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைந்த டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் 3வது மாவட்ட மாநாடு மாவட்டத் தலைவர் வி. சிங்கார வேலு தலைமையில் நடைபெற்றது. மாநில சம்மேளன பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன் கலந்து சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார். இந்த மாநாட்டில் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர். மாவட்ட சிறப்புத் தலைவராக எஸ்.முத்துக்குமரன், மாவட்டத் தலைவராக வ.சிங்காரவேலு, மாவட்டச்  செயலாளராக கணபதி, இணைச் செயலாளராக மா.ரவிக்குமார், பொருளாளராக அ.சேகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.