tamilnadu

டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

 சென்னை, ஜூன் 22- சமையல் எரிவாயு டேங்கர் லாரிகள் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன. விடுபட்ட லாரிகளுக்கும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் வணிக ஒப்பந்தம் வழங்க வலியுறுத்தியிருக்கும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், அவ்வாறு தரப்படவில்லை என்றால் ஜூலை 1ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 4,800 லாரிகளுக்கு ஒப்பந்தம் தரப்பட்ட நிலையில் 700 லாரிகளுக்கும் ஒப்பந்தம் தரக் கோரிக்கை விடுத்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் தென்னிந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.