சோழவரம் ஒன்றியத்தில் உள்ள 39-ஊராட்சிகளில் பணி யாற்றும் டேங்க் ஆப்ரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர் ஆகியோருக்கு 7-வது ஊதிய குழு அர சாணையின் படி 21-மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் சோழவரம் பிடிஒ அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.ஜி.சந்தானம் தலைமையில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகையை வழங்கிவிடுவதாக உறுதியளிக்கப்பட்டதை யடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.மாவட்டத் தலைவர் பி.கதிர்வேல், மாவட்டப் பொருளாளர் ஜே.ரமேஷ், சிஐடியூ மாவட்ட துணைத் தலைவர் பி.நடேசன் உட்பட பலர் பேசினர்.