தமிழ்நாடு பின்பற்றக்கூடிய கல்வி நடைமுறைகளை பீகார் மாநிலத்திற்கு கொண்டு சென்று அங்கு இதனை விரிவுபடுத்தவும், அரசுக்கு ஆலோசனை வழங்கவும் உள்ளனர். தமிழ்நாடு கல்வித்துறையின் அமைப்பு குறித்தும் தமிழ்நாடு கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் பாட புத்தகங்கள் குறித்தும் பீகார் கல்வித்துறை அதிகாரிகள் கேட்டறிந்தனர்.