தமிழ்நாடு ரெப்ரிஜிரேஷன் இஞ்சினியர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட சங்கம் துவக்கம்
கிருஷ்ணகிரி, அக். 11- தமிழ்நாடு ரெப்ரிஜிரேஷன் இன்ஜினியர்கள் சிஐடியூ கிருஷ்ணகிரி மாவட்ட சங்கம் துவங்கப்பட்டது. இதில்,மாநிலத் தலைவர் முகமது இஸ்மாயில், பொதுச் செயலாளர் சையது கே.சமிவுல்லா, மாநிலப் பொருளாளர் கே.எஸ்.ஸ்ரீதர், மாநில துணைத் தலைவர்கள் பெல்லார்மின் முன்னாள் எம்எல்ஏ, திருச்செல்வம், உமாசுதன், மாநில துணை செயலாளர்கள் செல்வகுமார், ஜெமினி, செல்வம், விஷ்ணு பிரசாத், அயூப்அலி, செயற்குழு உறுப்பினர்கள் அம்ஜத்வஜீர், நித்தியானந்தா, சஜாத் அஸ்லாம், நிஜாமுதீன், முகமதுசுபேர், முகமது அபுதாகிர், முகமது உசேன், திம்மராயன், பைஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர் ஃபயாஸ் உல்லா தலைமையில், செயலாளர் சையத் இஸ்மாயில், பொருளாளர் அஹ்மத்துல்லா, துணைத் தலைவர்கள் இர்பான் பஜீர், காதர் பாட்ஷா, செயலாளர்கள் காதர், புகழேந்தி முன்னிலையில் துவக்க விழா நடைபெற்றது. சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பி.ஜி.மூர்த்தி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.கே.நஞ்சுண்டன் வாழ்த்திப் பேசினர்.
