tamilnadu

img

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை தாக்கல்

சென்னை, அக். 18- பெண் சாலை ஆய்வாளரை துன்பு றுத்தும் புதுக்கோட்டை கோட்டம் கீரனூர் பிரிவு இளநிலை பொறியாளர் சாலை சிவபாதம் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சாலை ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ் சாலைத் துறை முதன்மை இயக்குநர்  அலுவலகம் முன்பு செவ்வாயன்று (அக். 18) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து  பேசினார். இளநிலை பொறியாளர் மற்றும்  வரை அலுவலர் உரிய அரசாணை இருந்தும் பதவி உயர்வு வழங்காமல் காலதாமதம் செய்வதை கைவிட வேண்டும், அரசாணை நிலை எண் 555இன்படி சாலை ஆய்வாளர் பணியிடத்தை தமிழக அரசின் நிரந்தர பணியிட வரிசையில் கொண்டுவர வேண்டும், தற்காலத்திற்கு உடன் படாத மிதிவண்டி படியை மாற்றி  அரசாணை 307இன்படி இருசக்கர  வாகன படி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்  ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டன.

மாநிலத் தலைவர் ஏ.சுரேஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் மாநில பொதுச்செயலா ளர் தா.திருமுருகன், மாநில பொருளா ளர் வி.செல்வராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.  நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.கண்ணன், பொதுச்செயலாளர் ஆர்.தீபக், சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆ.அம்சராஜா ஆகியோரும் பேசினர்.  இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து  ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கிடையே முதன்மை இயக்கு நர் குமார் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு  நடத்தினார். அப்போது பதவி உயர்வுக்கான பட்டியலை தயார் செய்து விரைவில் அறிவிப்பதாகவும், பிற கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

;