tamilnadu

img

தமிழக கொரோனா பாதிப்பு... மாவட்ட நிலவரம்... 

சென்னை 
தமிழகத்தின் கொரோனா மையமாக உள்ள சென்னையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 2 வார காலமாக தினசரி பாதிப்பு 1200-க்குள் இருந்த நிலையில், இன்று (சனிக்கிழமை) மீண்டும் 1200-யை தாண்டியுள்ளது. சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் 1,219 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 84 ஆயிரத்து 578 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 31 பேர் பலியாகிய நிலையில், இதுவரை அங்கு 1,407 பேர் பலியாகியுள்ளனர். 

சென்னைக்கு அடுத்து திருவள்ளூரில்  370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 323 பேருக்கும், வேலூரில் 191 பேருக்கும், மதுரையில் 185 பேருக்கும், தஞ்சாவூரில் 181 பேருக்கும், சிவகங்கையில் 176 பேருக்கும், நெல்லையில் 161 பேருக்கும், தூத்துக்குடியில் 160 பேருக்கும், கன்னியாகுமரியில் 146 பேருக்கும், தேனியில் 144 பேருக்கும், திருச்சியில் 124 பேருக்கும், கோவையில் 118 பேருக்கும், ராணிப்பேட்டையில் 109 பேருக்கும், திண்டுக்கல்லில் 107 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் 100-க்குள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  எப்பொழுதும் தமிழக கொரோனா பாதிப்பு பட்டியலில் டாப் ஆர்டரில்  இருக்கும் காஞ்சிபுரத்தில் இன்று 97 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

;