சென்னை
தமிழகத்தின் இன்றைய (செவ்வாய்) கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 1,107 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 96,438 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 24 பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,056 ஆக உயர்ந்துள்ளது. 769 பேர் குணமடந்த நிலையில், இன்னும் 12,852 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னைக்கு அடுத்து விருதுநகரில் 577 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 6,884 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூரில் 486 பேருக்கும், திருநெல்வேலி 387 பேருக்கும், தூத்துக்குடியில் 386 பேருக்கும், செங்கல்பட்டில் 365 பேருக்கும், மதுரையில் 346 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மற்ற மாவட்டங்களில்...
தேனி - 283
கோவை - 273
திருவண்ணாமலை - 268
காஞ்சிபுரம்,கன்னியாகுமரி - 223
தஞ்சாவூர் - 209
ராணிப்பேட்டை - 198
கள்ளக்குறிச்சி - 195
வேலூர் - 151
திருச்சி - 149
கடலூர் - 142
திருவாரூர் - 132
புதுக்கோட்டை - 128
சேலம் - 124
திண்டுக்கல் - 114
நீலகிரி (2), தருமபுரி (6) ஆகிய மாவட்டங்களில் ஒற்றை இலக்கில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.