புதுதில்லி:
கொரோனா பரவலில் தமிழகத்தில்விருதுநகர், தேனி, தூத்துக்குடி, சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங் கள் கவலைக்குரியவைகளாக உள்ளன. இந்த மாவட்டங்களில் சோதனைஎண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக இந்த மாவட்டங்களின் இறப்பு விகிதம்தேசிய மற்றும் மாநில சராசரி விகிதத்தை விட அதிகமாக உள்ளது.கொரோனா உயிரிழப்பில் தேசிய மற்றும் மாநில சராசரி விகிதத்தை விடஅதிகமான உயிரிழப்புகளை பதிவு செய்து வரும் மாவட்டங்கள் கவலைக்குரியவை என்று சுகாதார செயலாளர் கருத்து தெரிவித்தார்.கொரோனா நோய்த் தொற்றை சிறப்பாகக் கட்டுப்படுத்துதல் மற்றும் சிகிச்சை உள்ளிட்ட வசதிகளை மேலாண்மை செய்வதில் மத்திய-மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த உத்தியிலான செயல்பாட்டின் ஒரு பகுதியாக, மத்தியஅமைச்சரவைச் செயலர் ராஜேஷ் பூஷன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் குஜராத்தின் அகமதாபாத், சூரத், பெலகாவி, கர்நாடகாவின் பெங்களூரு நகர்ப்புறம், கலபுராகி, உடுப்பி, தமிழகத்தில் சென்னை,காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி, விருதுநகர், தெலுங்கானாவின் ஹைதராபாத், மேட்சல் மல்காஜி ஆகிய 16 மாவட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள இந்த 16 மாவட்டங்களில் மட்டும் ஒட்டு மொத்த இந்தியாவில்17 சதவீதம் கொரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தினசரி ஆகிய புதிய பாதிப்புகளை பதிவு செய்து வருவதோடு, கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை விகிதமும் இங்கு குறைவாக உள்ளது. பரிசோதனைகள் மூலம் கொரோனா பெருந்தொற்றை உறுதிப்படுத்தும் விகிதமும் இங்கு அதிகளவில் உள்ளது.
ஆலோசனைக் கூட்டத்தில் நான்குமாநிலங்களைச் சேர்ந்த சுகாதாரத் துறைச் செயலாளர்கள், மாவட்டக் கண்காணிப்பு அதிகாரிகள், மாநகராட்சி ஆணையர்கள், தலைமை மருத்துவ அதிகாரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.கொரோனா உயிரிழப்பைக் குறைக்கசுகாதார அமைச்சகத்தால் வழங்கப்பட்ட ஆலோசனைகள், வழிகாட்டுதல் கள், மருத்துவ சிகிச்சை முறைகள் செயல்பாட்டை உறுதி செய்ய வேண் டும் என்று மாவட்டங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் ஆம்புலன்ஸ்கள் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக சுகாதாரப் பணியாளர் களுக்கு தொற்று பரவாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அவர்களுக்கான கட்டுப்பாட்டு நடைமுறைகளை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியமானது என்று அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டப்பட்டது.சென்னையில்- 1,08,124, காஞ்சிபுரம்-11,422, திருவள்ளுர்-16,612, விருதுநகர்-9,773, தேனி-7,538,திருச்சிராப்பள்ளி-5,032, ராணிப் பேட்டை-6,774 பேர் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந் தோர் எண்ணிக்கை 41,585 ஆக உள்ளது.