விருதுநகர்:
விருதுநகரின் மிக முக்கிய சாலையாக ரயில்வே பீடர் சாலை உள்ளது. இந்தச் சாலையைக் கடந்து தான் ரயில் நிலையம், பேருந்து நிலையம், மெயின்பஜார் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும். நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள்,மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், ரயில்வே பீடர் சாலையில் உள்ள கழிவு நீர்வாறுகாலில் மண் நிரம்பி அடைப்பு ஏற்பட்டதால் கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. நகராட்சி ஊழியர்கள் பல நாட்கள் முயற்சி செய்தும் மண் அடைப்பை அகற்ற முடியவில்லை. இதனால் நகராட்சி நிர்வாகம், சாலையின் வடக்குப் பகுதியில் புதிய வாறுகால் கட்டும் பணியை செய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக இப்பணி நடைபெறுகிறது. அதே நேரத்தில்சாலையில் ஓடும் சாக்கடையை அகற்ற நகராட்சி முன் வரவில்லை. இதனால், அப்பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நகராட்சியிடம் கழிவு நீரை உறிஞ்சும் இரு வாகனங்கள் இருந்தும் பயனில்லை.
இந்தநிலையில் கழிவு நீரைஉடனடியாக அகற்ற வலியுறுத்திஇந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தினர் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர் தலைவர் தீபக் குமார், நகர் செயலாளர் பி.கருப்பசாமி, மாவட்டத் தலைவர் எம்.ஜெயபாரத், எஸ்.டி.மணிகண்டன், பவளம், விக்னேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.