சென்னை
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக நகர் பகுதியிலிருந்து மட்டுமல்லாது தற்போது கிராம பகுதிகளிலும் கொரோனா தனது பரவலை துவங்கியுள்ளது.
இந்நிலையில் மாநிலத்தின் இன்றைய (ஞாயிறு) கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 1,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 85,859 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று சென்னையில் 27 பேர் பலியாகிய நிலையில், அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,434 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தொடர்ந்து 5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 200-யை தாண்டியுள்ளது. திருவள்ளூரில் 405 பேருக்கும், செங்கல்ப்பட்டில் 306 பேருக்கும், விருதுநகரில் 265 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 220 பேருக்கும், மதுரையில் 206 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
மற்ற மாவட்டங்களில் பாதிப்பு (100-க்கு மேல்)
தூத்துக்குடி - 151
திண்டுக்கல் - 139
திருச்சி - 138
கோவை - 135
திருவண்ணாமலை - 134
வேலூர் - 133
கன்னியாகுமரி - 131
தேனி - 120
கள்ளக்குறிச்சி - 112