சென்னை, அக்.1 - தமிழக அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் செய்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 8 ஆம் தேதி காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 8 அன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய அமைச்சர்களின் துறை சார்ந்த செயல்பாடுகள் குறித்து அறிவுறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அரசுமுறைப் பயண மாக முதலமைச்சர் அமெரிக்கா சென்று முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார். அடுத்தக் கட்டமாக தொழில் முதலீடு கள் ஈர்ப்பது பற்றி, வரும் நாட்களில் செயல்படுத்த வேண்டிய புதிய திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம், வடகிழக்கு பருவமழைக் காலங்களில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பணிகள் குறித்தும் பேசப்படும் என்று கூறப்படுகிறது.