tamilnadu

img

ஜீவா, பட்டுக்கோட்டையார் வரிசையில் பாடமாகும் தமிழ்ஒளி

ஜீவா, பட்டுக்கோட்டையார் வரிசையில் பாடமாகும் தமிழ்ஒளி

சென்னை, அக்.2- கவிஞர் தமிழ்’ஒளியின் நூற்றாண்டை தமிழ்நாடு அரசாங்கம் கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை உடன் பல்வேறு தமிழ் , பண்பாட்டு அமைப்புகள் இணைந்து சிகரம் ச.செந்தில்நாதன், ஈரோடு தமிழன்பன், இரா.தெ.முத்து,பிரின்ஸ் கஜேந்திரபாபு,வே.மணி தலைமையில் 2013 ல் உருவாக்கப்பட்ட அமைப்பு கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு. கடந்த பத்தாண்டுகளாக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்த நூற்றாண்டு விழாக்குழுவின் கோரிக்கை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் ஏற்கப்பட்டு தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் தமிழ்ஒளிக்கு சிலையும், தமிழ்வளர்ச்சி துறையில் 50 லட்ச ரூபாய் வைப்புநிதியாக வைக்கப்பட்டு கிடைக்கப் பெறும் வட்டியில் ஆண்டு தோறும் தமிழ் சார்ந்த போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு நடத்தி, தமிழ்ஒளி பெயரில் பரிசுகள் வழங்க வேண்டுமென அரசு ஆணை வெளி யிடப்பெற்று அவ்வாறே அரசு விழாவும் நடைபெற்று வருகின்றது. இந்தச் சூழலில் கவிஞர் தமிழ்ஒளி யின் 102 ஆவது பிறந்த நாள் கருத்த ரங்கம், கவியரங்கத்தை சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை உடன் இணைந்து கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு இணைந்து நடத்தியது. திரளான தமிழ்த்துறை மாண வர்கள்,ஆய்வாளர்கள் பேராசிரிய ர்கள், படைப்பாளிகள் பங்கேற்ற நிகழ்வாக நடந்தேறியது. தமிழ்ஒளியின் திராவிட , பொது வுடைமை நோக்கிலான படைப்புகளை நாங்கள் அறிவோம்.தகுந்த நேரத்தில் எங்கள் தமிழ்த்துறை இணைந்து இந்நிகழ்வை நடத்துவது எங்களுக்கு பெருமை தருவதாகும் என கல்லூரி முதல்வர் து.தங்கராசன் தன் தலைமை உரையில் பகிர்ந்து கொண்டார். நிகழ்வை நூற்றாண்டு விழாக்குழு உடன் நடத்த தகுந்த முன்னை டுப்புகளை செய்த தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் க.ஜெயபாலன் , தங்கள் கல்லூரி பதினெட்டு ஆண்டு களுக்கு முன்பு தங்கள் பாடத் திட்டத்தில் ப.ஜீவானந்தம், பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் படைப்பு களை பாடமாக சேர்த்தது போல, கவிஞர் தமிழ்ஒளியின் படைப்புகளும் பாடத்திட்டத்தில் இணையும் காலம் வருமென தன் வரவேற்புரையில் கூறி மகிழ்ந்தார். வியாபாரி ஒருவன் தான் கூண்டில் வைத்து வளர்த்த கிளிக்கு திருடன் என பேசக் கற்றுக் கொடுத்தான்.வியாபாரியை பலர் காண வரும் பொழுது திருடன் திருடன் என கிளி கத்திக்கொண்டே இருந்தது. இதனால் எரிச்சலடைந்த வியாபாரி கூண்டைத் திறந்து போ என்றான். அட முட்டாளே நீ எனக்கு திருடன் என மட்டும்தான் பேசக் கற்றுக் கொடுத்தாய். நீதான் திருடன் என கத்தியவாறே கிளி பறந்து போனது என்ற தமிழ்ஒளியின் குறுங்கதையை ஒட்டிப் பேசிய சிகரம் செந்தில்நாதன் மாணவர்கள் எது தீது எது சரி என்பதை தமிழ்ஒளி படைப்புகள் வழியாகப் புரிந்து கொண்டு மாணவர்கள் செயல்பட வேண்டுமென தன் சிறப்புரையில் கேட்டுக் கொண்டார். கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு செயலாளர் இரா.தெ.முத்து நிகழ்வை வாழ்த்திப் பேச விழாக்குழு பொருளாளர் வே.மணி நன்றி உரை பகிர்ந்தார். முன்னதாக கவிஞர் நா.வே.அருள் தலைமையில் பேராசிரியர்கள் சி.ஆர்.மஞ்சுளா, வாலிதாசன், கவிஞர் ரவிவெங்கடேசன் பங்கேற்ற கவியரங்கம் நடைபெற்றது.  ரெய்னா,சதீஷ்,சித்ரா,சரத்குமார், தனுஷ்,கோவி.அன்பரசு, சுவித்ரா, சரண், சந்தோஷ், பிரியதர்சினி, ஏக வள்ளி, சிதம்பரம், பிரதிபா,ரோஷினி, ஆகாஷ், தமிழரசன்,மெஹராஜ் என  முதுகலை,இளங்கலை பயிலும் மாணவர்கள் தமிழ்ஒளியின் பல்வேறு கவிதைகளை வாசித்து நிகழ்வை கூடுதல் அழகாக்கினர்.