tamilnadu

img

சமூகநலக்கூட பணிகள் : கவுன்சிலர் ஆய்வு

திருவொற்றியூர் 4ஆவது வார்டு ராமநாதபுரத்தில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் சமூகநலக்கூடம், ரூ.78 லட்ச மதிப்பீட்டில் கட்டப்படும் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றின் பணிகளை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  உதவி பொறியாளர் சஞ்சீவிராவ் உடன் இருந்தார்.