சென்னையில் திடீர் மழை
சென்னை,அக்.5- சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் திடிரென கனமழை பெய்ததால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்த னர். மீனம்பாக்கம் அஸ்தினா புரம் பள்ளிக்கரணை மேட வாக்கம் கோவிலம்பாக்கம் பல்லாவரம் குரோம் பேட்டை பம்மல் அனகா புத்தூர் பொழிச்சலூர் செம்மஞ்சேரி புதுப்பாக்கம் மாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் ஞாயிறன்று (அக்.5) கன மழை பெய்தது.
அதிகாரிகளை மிரட்டிய அதிமுக நிர்வாகி மீது வழக்கு
கடலூர், அக்.5- வடலூர் ஆபத்தானபுரம் பச்சை வாழி அம்மன் கோயில் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆய்வு செய்ய வந்த இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் தலைமையிலான குழுவினரை அதிமுக வடலூர் நகர செயலாளர் பாபு மற்றும் அவரது கூட்டாளிகள் வழிமறித்து, தகாத வார்த்தைகளால் மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதனைத் தொடர்ந்து வடலூர் காவல் நிலையத்தில் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், அதிமுக நகர செயலாளர் பாபு மற்றும் பூசாரிக்குப்பம் நடராஜன் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.