tamilnadu

img

நிற்காமல் செல்லும்  அரசு பேருந்து மாணவர்கள் அவதி

நிற்காமல் செல்லும்  அரசு பேருந்து: மாணவர்கள் அவதி

திருவண்ணாமலை, ஆக.20- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகாவில் கொண்டயான்குப்பம் – வந்தவாசி பேருந்து (எண் 13), ஏம்பலம் கிராமம் பேருந்து நிறுத்தத்தில், பள்ளி கல்லூரி நேரங்களில் பேருந்து நிற்காமல் செல்வதால் மாணவ, மாணவிகள் அவ திப்பட்டு வருகின்றனர். ஏம்பலம் கிராம மக்கள் தெரிவித்த போது, ஏம்பலம் கிராம பேருந்து நிறுத்தத்தில் பள்ளி கல்லூரி நேரங்க ளில் மாணவ, மாணவர்கள் பேருந்துக்காக காத்திருக் கின்றனர். ஆனால் அரசு பேருந்து ஏம்பலம் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் அவதிப்படுகின்றனர். அரசு பேருந்து நிற்காமல் செல்வதால் கால்நடை யாகவோ, லாரி, வேன், டிராக்டர் போன்ற வாகனங்களில் செல்வதால் மாணவ, மாணவிகளின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, கிராம பொதுமக்கள் மற்றும் மாணவர்களின், நலன் கருதி ஏம்பலம் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நின்று செல்ல அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.