ஆர்.கே.நகர் கல்லூரியில் கூடுதலாக ஆசிரியர்களை நியமனம் செய்திடுக மாணவர் சங்க மாநாடு வலியுறுத்தல்
சென்னை, அக். 16- ஆர்.கே.நகர் கல்லூரியில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய மாணவர் சங்கம் வடசென்னை மாவட்டம், ஆர்.கே. நகர் கல்லூரி 3ஆவது கிளை மாநாடு புதனன்று (அக்.15) அனிஃபா பாத்திமா தலைமையில் நடை பெற்றது. யாஷ்மிகா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்டத் தலைவர் மோகன கிருஷ்ணன், துணை தலைவர் நவீன்குமார், துணைச் செயலாளர் குணா ஆகியோர் பேசினர். தீர்மானங்கள் கல்லூரியில் அடிப்படை வசதி களை மேம்படுத்த வேண்டும், அனைத்து துறைகளிலும் கூடுதலாக பேரா சிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு தலைவராக எத்திராஜ், செயலாளராக அனிஃபா பாத்திமா உள்ளிட்ட 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.