வேலை நிறுத்த விளக்கக் கூட்டம்
44 தொழிலாளர்கள் நல சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 9ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்த விளக்க கூட்டம் காக்களூரில் உள்ள எம்.டி.ஐ - எம்.ஆர்.பி. தொழிற்சாலையில் நடைபெற்றது. சிஐடியு வடசென்னை மாவட்ட துணைச் செயலாளர் சு.பால்சாமி பேசினார்.