tamilnadu

img

சோழமண்டலத்தில் கல்லில் கலைவண்ணம்

சோழமண்டலத்தில் கல்லில் கலைவண்ணம் 

உலகின் சிறந்த கற்களை வழங்கும் நிறுவனமாக மதிப்பிடப்ப டும் ஸ்டோன்X, ஆகஸ்ட் 29ஆம் தேதி, வரலாற்று சிறப்புமிக்க சோழ மண்டலம் கலைஞர்களின் கிராமத்தில் “ஸ்டோன் போர்ட்ரெய்ட்ஸ்”-  என்ற பெயரில் கற் சித்திரம்- என்ற நிகழ்வினை ஒருங்கினைத்திருந்தது.  பெங்களுருவைத் தொடர்ந்து சென்னையில் அரங்கேறிய இந்த நிகழ்வு, கல்லில் பொதிந்துள்ள கலையை அனைவரும் ரசிக்கும்படி அமைந்திருந்தது. விருந்தினர்கள் கற்களைப் பார்வை யிடுதல், தொடுதல், மற்றும் இசையும்  சுவையும் கூடிய அனுபவங்களின் வழியாக வழிநடத்தப்பட்டனர். கல்லின் தோற்றத்தை விவரிக்கும் காட்சிகள், கைகளில் உணரக்கூடிய கல்லின் குணாம்சங்கள், அந்தந்த பிராந்தியத்தின் இசையுடன் கூடியதாக இந்த நிகழ்வு இருந்தது.   நிகழ்வின் சிறப்பம்சமாக மகா பலிபுரத்தைச் சேர்ந்த நான்கு பாரம்பரிய சிற்பக் கலைஞர்கள் — எஸ். வெள்ளியன், ஏ. விஸ்வநாதன், எஸ். சுரேஷ் மற்றும் பி. சரவணன் — ஆகியோர் பார்வையாளர்களை கற் பலகைகளில் தீட்டப் பட்டிருந்த ஓவி யங்களை உளியினால் செதுக்கிட உதவி செய்து, விருந்தினர்களுக்கு கல்லின் தன்மையை நேரடியாக அனுபவம் பெறும் வாய்ப்பை வழங்கினர். மேலும், கலைஞர் ஆர். மகேஷின் “தி மோனார்க்” எனும் சிற்பமும் நிகழ்வில் காட்சிப் படுத்தப் பட்டிருந்தது. Grigio Bronze Amani வகை பளிங்குக் கல்லில் உருவாக்கப்பட்ட இந்த சிற்பம், குதிரைகளின் மீதான அவரது ஈர்ப்பையும், ஓவியத்திலிருந்து சிற்பத்திற்கு வந்தடைந்துள்ள அவரது வளர்ச்சியையும் பிரதி பலித்தது. விலங்குகள் மற்றும் பறவைகளை பல ஊடகங்களில் உணர்வுப்பூர்வமாக வடிவமைக்கும் மகேஷின் சிறந்த கலைத் திறனுக்கு சான்றாக விளங்கியது. “ஸ்டோன் போர்ட்ரெய்ட்ஸ்’ நிகழ்வின் மூலம் நாங்கள், கல்லின் ஸ்திரத் தன்மையையும் அது நம் கலாச்சார நினைவுகள் மற்றும் கற்பனை வளத்தின் பாத்திரமாகவும் திகழ்வதை எடுத்துக் காட்ட விரும்பி னோம். சென்னையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சோழமண்டலம் கலை ஞர்களின் கிராமத்தில் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தது எங்களுக்கு மிகவும் பெருமை அளிக்கிறது. பாரம்பரிய கலைஞர்கள், நவீன கலைஞர்கள் மற்றும் பிற கலாச்சார கலைஞர்களை ஒன்றிணைக்கும் எங்களது இந்தப் பயணம் இந்தியாவில் பிற முக்கிய நக ரங்களில் தொடரும்,” என ஸ்டோன்   எக்ஸ்  நிறுவனத்தின் உயர்  அதிகாரி சுஷாந்த் பாதக் தெரிவித்தார்.