tamilnadu

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை-நெல்லை சிறப்பு ரயில்கள்

சென்னை, ஜன. 10- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-  சென்னை எழும்பூர்- நெல்லை சுவிதா சிறப்பு ரயில்(வண்டி எண்:82601), வரும் 10-ந்தேதி மாலை 6.50 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு நெல்லை சென்றடையும். இதைப்போல் எழும்பூர்- நெல்லை சுவிதா சிறப்பு ரயில்(82607), வரும் 11-ந்தேதி இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.45 மணிக்கு நெல்லை சென்றடையும்.  தாம்பரம்-நெல்லை சுவிதா சிறப்பு ரயில்(82603), வரும் 12-ந்தேதி தாம்பரத்தில் இருந்து 7.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு நெல்லை சென்றடையும். இதைப்போல் நெல்லை- தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரயில்(06002), வரும் 11-ந்தேதி நெல்லையில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

 நெல்லை-தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06004), வரும் 12-ந்தேதி நெல்லையில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும். நெல்லை-தாம்பரம் சுவிதா சிறப்பு ரயில் (82604), வரும் 18-ந்தேதி மாலை 6.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.  தாம்பரம்-நாகர்கோவில் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06075), வரும் 20-ந்தேதி காலை 11.20 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் நள்ளிரவு 2 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். நாகர்கோவில்-தாம்பரம் சுவிதா ரயில் (82606), வரும் 19-ந்தேதி மாலை 5 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும். திருச்சி-எழும்பூர் சிறப்பு கட்டண சிறப்பு ரயில்(06026), வரும் 11-ந்தேதி மதியம் 2.30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, அன்று இரவு 8.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும். நாகர்கோவில்-திருச்சி சிறப்பு கட்டண சிறப்பு ரயில்(06006), வரும் 14-ந்தேதி காலை 10.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, அன்று மாலை 6 மணிக்கு திருச்சி சென்றடையும். தாம்பரம்-நாகர்கோவில் சுவிதா ரயில்(82609), வரும் 13-ந்தேதி இரவு 7 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;