tamilnadu

img

நடிகர் சங்க தேர்தல்: நாசர் தலைமையிலான அணி வெற்றி   

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2019 -ல் தேர்தல் நடைபெற்றது. இதில், பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும், நாசர் தலைமையிலான மற்றொரு அணியும் போட்டியிட்டன. இத்தேர்தலை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கால், வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. 

இந்நிலையில், இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. இதில், பாண்டவர் அணியின் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் போட்டியிட்டனர். மற்றொரு தரப்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த் ஆகியோர் போட்டியிட்டனர். இறுதியில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி சார்ப்பாக போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.