tamilnadu

img

அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் தென்சென்னை மாவட்ட பேரவை வலியுறுத்தல்

அங்கன்வாடி ஊழியர்களைபணி நிரந்தரம் செய்ய வேண்டும் தென்சென்னை மாவட்ட பேரவை வலியுறுத்தல்

சென்னை, அக். 6 - அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவி யாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவி யாளர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட 5வது மாவட்ட பேரவை திங்களன்று (அக்.6) கிண்டியில் நடைபெற்றது. இந்தப்பேரவையில், தேர்தல் வாக்குறுதி 313ன் படி ஊழியர்கள் மற்றும் உதவி யாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,  மாத ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வூதியமாக அகவிலை ப்படியுடன் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், பணிக் கொடையாக ஊழியருக்கு 10 லட்சம் ரூபாயும், உதவியாளருக்கு 5 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 25 சதவீதத்திற்கு மேற்பட்ட ஊழியர் பணியிடங்களையும், 20 சதவீதத்திற்கும் அதிகமாக உதவியாளர் பணியிடங்களையும் விரைந்து நிரப்ப வேண்டும். 2023ஆம் ஆண்டு பேச்சுவார்த்தையில் அமைச்சர் ஒப்புக் கொண்டபடி மே மாதம் கோடை விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. பேரவைக்கு மாவட்டத் தலைவர் சி.சாந்த குமாரி தலைமை தாங்கினார். ஆர்.சாந்தி கொடியேற்றினார். துணைத்தலைவர் என்.அம்சா வரவேற்க, இணைச் செயலாளர் கே.சீதா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார், மாநில இணைச் செயலாளர் எஸ்.ஹேம பிரியா துவக்கவுரையாற்றினார், வேலை அறிக்கையை மாவட்டச் செய லாளர் கே.நிர்மலாவும், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் ஜி.ஸ்ரீதேவியும் சமர்ப்பித்தனர். சிஐடியு மாவட்டச் செய லாளர் ஜி.செந்தில்குமார், மாநிலக்குழு உறுப்பினர் கே.முனீஸ்வரி ஆகியோர் வாழ்த்திப் பேசினார். மாநில பொதுச் செயலாளர் டி.டெய்சி நிறைவுரையாற்றி னார். நிர்வாகிகள் தேர்வு மாவட்டத் தலைவராக என்.அம்சா, செயலாளராக ஏ.முனீஸ்வரி, பொருளா ளராக கே.சீதா ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.