tamilnadu

img

“சாதியைக் குறிப்பிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை”

சென்னை,மார்ச் 28- நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு 63 பேர் வேட்பு மனுபு தாக்ககல் செய்தனர். இந்நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை  மாந ராட்சியின் அடையாறு மண்டல அலு கவலத்தில் தேர்தல் நடத்தும் அலு வலர் எம்.பி.அமித் தலைமையில் நடைபெற்றது.

இந்த பரிசீலனைக் கூட்டத்தில் அந்தந்த கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, தென் சென்னை தொகுதி அதி முக வேட்பாளர் மருத்துவர் ஜெ.ஜெயவர்த்தன் வேட்பு மனு ஏற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழ்ச்சி தங்கப் பாண்டியன் வேட்புமனுவில் சாதியைக் குறிப்பிடவில்லை என்ப தால். வேட்புமனுவை ஏற்கல் கூடாது என சுயேட்சை வேட்பாளர் ஜெய ராமன் முறையீடு செய்தார்.

சாதியைக் குறிப்பிட வேண்டும் என கட்டாயம் இல்லை எனவும், அது வேட்பாளர் விருப்பத்திற்கு உட்பட்டது என தேர்தல் நடத்தும் அலுவலர் அமித் கூறி, தமிழச்சி தங்கப்பாண்டியன் வேட்பு மனு வையும் ஏற்றுக் கொண்டார். பின்னர், தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தர ராஜன் வேட்பு மனுவில், ஆளுநர் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டதற்கான ஆவணத்தை இணைக்கவில்லை என்றால் நிராகரிக்க வேண்டும் என சுயேட்சை வேட்பாளர் மோகன் முறையீடு செய்தார்.

அசையும் சொத்துகளில் வரு மானம் ஈட்டியது குறித்த விவரங்க ளில் ஒரு ஆவணம் இணைக்கப்பட வில்லை என சுயேட்சை வேட்பாளர் பாலாஜி முறையீடு செய்தார். ஆனால், வேட்புமனுவை நிராகரிக்க போதிய காரணங்கள் இல்லாததால், தமிழிசை சவுந்தர ராஜன் வேட்பு மனுவையும் தேர்தல் நடத்தும் அலுவலர் அமித் ஏற்றுக் கொண்டார். 

வேட்பு மனுக்களை வரும் 30ஆம் தேதி வரையில் திரும்பப் பெறலாம் எனவும், அன்று மதியம் 3 மணிக்கு போட்டியில் உள்ள வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;